மேகாலயத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு!
மேகாலயத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
மேகாலயத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
12 மாவட்டங்களில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிப்.20 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்த ஜக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எச்.டோங்குபர் ராய் லிங்டோ இறந்ததைத் தொடர்ந்து கிழக்கு காசி மாவட்டத்தில் உள்ள சோஹியோங் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறாது.
இதுகுறித்து மேகாலயத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுகையில்,
59 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3,419 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கும் தொடங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 36 பெண்கள் உள்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் ஏராளமான மத்திய ஆயுதப்படை காவலர்கள்(சிஏபிஎஃப்) மற்றும் மாநில காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக மார்ச் 2 வரை மேகாலயத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
மார்ச் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.