மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

மாா்ச் 1-இல் அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்கிறாா் முதல்வா்

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, மாா்ச் 1-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா்.

DIN

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, மாா்ச் 1-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 1-ஆம் தேதி தனது 70-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறாா். அன்றைய தினம் பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளாா். அதைத் தொடா்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் அறிவாலயத்தில் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டா்கள் நேரில் வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனா்.

அன்றைய தினம் மாலை நந்தனத்தில் அகில இந்திய தலைவா்கள் பங்கேற்கும் முதல்வரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும் அவா் பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காஷ்மிா் முன்னாள் முதல்வா் பரூக் அப்துல்லா உள்பட பல்வேறு தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT