மேகாலயத்தில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள். 
தமிழ்நாடு

காலை 11 மணி நிலவரம்: மேகாலயத்தில் 26.70%, நாகாலாந்தில் 35.76% வாக்குகள் பதிவு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 26.70 சதவீதமும், நாகாலாந்தில் 35.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

DIN

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 26.70 சதவீதமும், நாகாலாந்தில் 35.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரு மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. 

இதேபோல் 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. 

இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். காங்கிரஸ் தரப்பில் மேகாலயத்தில் ராகுல் காந்தியும், நாகாலாந்தில் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT