கோப்புப்படம் 
தமிழ்நாடு

மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிக்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம்  நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

DIN

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம்  நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்றுடன் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் (பிப். 28) நிறைவடைகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. 

பலரும் ஆதாா் எண்ணை இணைக்கததால், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப் 28 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT