தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு 
தமிழ்நாடு

அதிமுக விவகாரம்: தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

அதிமுக தலைமையகத்திற்கு  ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

அதிமுக தலைமையகத்திற்கு  ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அளித்த ஆவணங்கள்படியே அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.


மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்து வாழும் வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தில்லியில் ஜன. 16-இல் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. 

இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்கு அழைப்பு விடுத்து அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அந்த வகையில் தமிழகத் தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு தனித்தனி கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதத்தை ஓபிஎஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்தின் அலுவலகத்திலேயே பெற்று வந்துவிட்டனா்.

ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றது. இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஏற்கவில்லை. அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற ஒரு பதவி இல்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தைத் தமிழகத் தோ்தல் அதிகாரிக்கே அதிமுக தலைமை திருப்பி அனுப்பியது.

ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டிருந்தது. அதைப்போல மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் பதவி தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஜன. 4-இல் தீா்ப்பு வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT