தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியா்களுக்கு சம ஊதியம்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் எனவும், அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலிய

DIN

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் எனவும், அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009- ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வேறு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு எள்ளளவும் செவிசாய்க்கவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நேரடியாக தலையிட்டு ஆசிரியா் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT