தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் முன்கூட்டியே இயக்கப்படுமா? நாளை ஆலோசனை

DIN


பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் நாளை (ஜன.3) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

விடுமுறை நாளில் பொங்கல் வருவதால், பொங்கல் சிறப்புப் பேருந்துகள் முன்கூட்டியே இயக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், சென்னையில் 6 முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில் இடங்கள் நிரம்பிவிட்டன. 

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

ஜனவரி 13, 14 தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவுப் பேருந்துகளில் இருக்கைகள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது. 

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு தற்போது 12-ஆம் தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொங்கல் சிறப்புப் பேருந்துகளை முன்கூட்டியே இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT