தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை(ஜன. 4) முதல் ஹால் டிக்கெட்!

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் நாளை(ஜன. 4) இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில்(https://dge1.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

பள்ளிகள், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT