கோப்புப்படம் 
தமிழ்நாடு

'புதிய சட்டம் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை காக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது': அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை மறைமுகமாகப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

DIN

ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை மறைமுகமாகப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசு கொண்டு வருவதாகக் கூறப்படும் புதிய சட்டம், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துவோரைப் பாதுகாக்கின்ற சட்டமாக,  அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்கின்ற சட்டமாகவோ இருக்கக் கூடாது.

தமிழக அரசின் நோக்கம், முழுமையாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் வலியுறுத்துவோம்.

மத்திய அரசின் ஆன்லைன் சூதாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துவிட்டுதான் இது குறித்து முழுமையாக கருத்து கூற முடியும்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது; அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதை அடிப்படையாக வைத்து மத்திய அரசு அந்தச் சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை மறைமுகமாகப் பாதுகாக்கின்ற வகையில் இருந்தால் அது கண்டிக்கத்தக்கதாக இருக்கும்.

தமிழகத்திலேயே ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். அதேபோல் வரும் ஜன. 6ஆம் தேதி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை முறைப்படி நடத்தவே ஆன்லைன் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டியை முறைப்படுத்தி பதிவு செய்வதை விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர். அதேபோல ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு காப்பீடு கட்டாயம். விழா நடத்துபவர்களை காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் காப்பீடு செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர் என்றார் அமைச்சர் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT