தமிழ்நாடு

பொங்கல்: அரசுப் பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு!

பொங்கல் விடுமுறையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

DIN

பொங்கல் விடுமுறையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

விழா நாள்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், சென்னையில் 6 முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்துகளில் முன்பதிவு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டன.

இதையடுத்து ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுவரை சென்னையிலிருந்து மட்டும் 1.62 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

மேலும் சிறப்புப் பேருந்துகளுக்கு நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். கோயம்பேடு - 10, தாம்பரம் சானடோரியம் - 1, பூந்தமல்லி - 1 என 12 முன்பதிவு மையங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட 3 நாள்களில் 24*7 நேரமும் சென்னை இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அதுகுறித்து புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய இரண்டு அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்  

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்  1800 4256 151,  044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT