தமிழ்நாடு

ஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை

DIN

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

லஞச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பணிநீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றுகொண்டு தகுதியற்ற நபர்களுக்கு பணி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பணிநீக்க உத்தரவை எதிர்த்து பவ்னீத் சூர்யா, ராஜசேகர், எழுமலை உள்ளிட்ட 25 பேர் வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் எந்த நோட்டிசும் தராமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்துள்ளனர்.

மேலும், ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT