தமிழ்நாடு

ஆளுநர் ரவி நாளை தில்லி செல்கிறார்!

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (வெள்ளிக்கிழமை)  பிற்பகலில் தில்லி செல்கிறார். 

பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை தொடர்பாக, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சனிக்கிழமை மீண்டும் அவர் சென்னை திரும்புவார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தில்லியில் இன்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசிய நிலையில், ஆளுநர் ரவியின் தில்லி பயணத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நாளை தமிழ்நாடு ஆளுநர் தில்லி செல்லவிருக்கிறார். மதியம் 1.30 மணிக்கு தில்லி செல்லும் ஆளுநர் அடுத்த நாள் மாலைதான் சென்னை திரும்புகிறார்.

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT