தமிழ்நாடு

திருச்சி புதிய விமான நிலையம் ஜூன் மாதத்தில் தயாராகும்

திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டப் பணியாக, புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டப் பணியாக, புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.951 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய முனையம் ஜூன் 23ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஒரே நேரத்தில் சுமார் 2,900 பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த முனையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

48 பயணிகள் வருகை மையங்கள், 10 போர்டிங் பாலங்கள் என பல நவீன வசதிகளுடன், பயணிகளின் வருகையை விரைவாக்கவும், எளிமையாக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

சுமார் 75 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டடமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்துக்கு புதிய முனையம் கட்டும் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து ஒத்திகை நடைபெறும். ஜூன் மாதம் புதிய முனையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT