மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், ஜன.13ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,250 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.