கோப்புப்படம் 
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகள் நிறைவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 ஆம் சுற்று நிறைவடைந்து 9 ஆவது சுற்று தொடங்கியது.

DIN

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 ஆம் சுற்று நிறைவடைந்து 9 ஆவது சுற்று தொடங்கியது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 7 ஆம் சுற்று முடிவில் 500 காளைகள் அவிழ்க்கப்பட்டு 175 பேர் பங்கேற்றனர். மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் 23 காளைகளை பிடித்து தொடர்ந்து முதலிடம் பெற்றார்.

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8 சுற்றுகள் நிறைவடைந்து 9 ஆவது சுற்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த சிறுவனை வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை முட்டியதில் சிறுவன் வலது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுவரை காயமடைந்தவர்கள் விபரம்

மாடுபிடி வீரர்கள் : 10

மாட்டு உரிமையாளர்கள்   : 19

பார்வையாளர்கள்  : 9

பலத்த காயம் : 17

லேசான காயம் : 21

மொத்தம்     : 38

மேல் சிகிச்சை : 13( 16 வயது சிறுவர்கள் இருவர் உட்பட)

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

போட்டியில் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், தங்க காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

ஜல்லிக்கட்டு போட்டில் பங்கேற்க வரும் காளைகளுக்கு மருத்துவ பரிசோனைக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் ஐஸ்வர்யமும்... ஆஷிகா!

கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் - அண்ணாமலை

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

லடாக்கின் குரலை ஒடுக்க இளைஞர்களைக் கொன்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது! -ராகுல் காந்தி

மாலை மயங்குகிறது... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT