தமிழ்நாடு

அமைச்சராக ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி: உதயநிதி ஸ்டாலின்

அமைச்சராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN

அமைச்சராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, 'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் என்ற முறையில் துவக்கிவைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக பங்கேற்று விளையாடி வருகின்றன.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவது குறித்து முதல்வர் அறிவிப்பார். தற்போது ஒரு அவசர வேலை வந்ததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பிச் செல்கிறேன்' என்று தெரிவித்தார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT