காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயம் ஆதீனம் 13-ஆவது பட்டம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் (82) செவ்வாய்க்கிழமை (ஜன.17) காலை 6.30 மணிக்கு பரிபூரணம் (முக்தி) அடைந்தார்.
கோவிலூர் மடலாயம் ஆன்மீகப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி என செயல்பட்டு வருகிறது. இம்மடத்தின் ஆதீனமாக மெய்யப்பசுவாமிகள் சிறப்பாக சேவைகள் செய்து வந்தார்.
இதையும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின் தகவல்
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் ஆதீனம் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார். புதன்கிழமை (ஜன.18) பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை செய்து சித்தி செய்யப்படும். வரும் ஜன. 26 புதன்கிழமை 10 ஆம் நாள் மோட்ச தீபம் போடப்படும் என்று கோவிலூர் மடலாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.