தமிழ்நாடு

விமானத்தின் அவசரகால கதவை திறந்த தேஜஸ்வி? அண்ணாமலை உடனிருந்தாரா?

DIN

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்தது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 10.05 மணியளவில் இண்டிகோ விமானம்(ஏடிஆர் 72-600) புறப்பட்டது. விமானம் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால கதவு திறக்கப்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அவசரகால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் சரிபார்க்கப்பட்டு 2 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒரு மாதத்திற்கு பிறகு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த விமானத்தில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணம் செய்தனர். அவசரகால கதவின் அருகில் தேஜஸ்விதான் அமர்ந்திருந்தார்.

மேலும், விமானம் கிளம்பி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விமானக் குழுவினர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவசரகால கதவை தேஜஸ்வி திறந்தார். இதன்விளைவாக அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டோம்.

இதுதொடர்பாக தேஜஸ்வி மன்னிப்பு கேட்ட பிறகே அவரை பயணம் செய்ய விமான நிர்வாகம் அனுமதித்தது. எனினும், அவசரகால கதவின் அருகிலிருந்த அவரது இருக்கை மாற்றப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதே விமானத்தில் பயணம் செய்த திமுக பேச்சாளர் அரசுகுமார், தேஜஸ்வியும், அண்ணாமலையும் இந்த விமானத்தில் இருந்தததை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விமான அவசரகால கதவு திறந்த விவகாரத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எனினும், அவசரகால கதவு திறக்கப்பட்டது உண்மைதான் என உறுதிபடுத்திய இண்டிகோ விமான நிறுவனம் திறந்தவரின் பெயரை இதுவரை தெரிவிக்கவில்லை.

இணையத்தில் இந்த விவகாரம் வைரலாக தொடங்கிய நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT