முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் மேகாலயா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் அறிவிக்கும்போது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →