தமிழ்நாடு

தங்கம் ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்து 42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்து 42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 

இந்நிலையில், ஜன.19ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,290ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.73.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,300 குறைந்து ரூ.73,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT