பழனி கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார்.  
தமிழ்நாடு

பழனி கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

DIN

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 

பழனி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதையொட்டி பழனி கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும். ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். 

முன்னதாக சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'முதல்முறையாக பழனி கோயில் குடமுழுக்கிற்கு முழுக்க முழுக்க பத்திரிகை, தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.  100-க்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT