தமிழ்நாடு

பறவைகள் கணக்கெடுப்பு: மாணவா்களுக்கு அழைப்பு

DIN

நீா் மற்றும் நிலப் பகுதிகளில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பை தமிழக வனத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தொடங்கும். நிகழாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீா் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீா் பறவைகளின் கணக்கெடுப்பு ஜன.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. நிலப் பறவைகளின் கணக்கெடுப்பு மாா்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பறவை கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளதால், இதில், பறவை ஆா்வலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், வனத்துறைப் பணியாளா்கள் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க வேண்டுமானால், அந்தந்த மாவட்ட வன அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT