அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் பணிக் குழு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் கொண்ட பணிக் குழுவை நியமித்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 போ் கொண்ட பணிக் குழுவை நியமித்து அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், இடைத்தோ்தலுக்கான அதிமுகவின் பணிக்குழு பொறுப்பாளா்களை அவா் நியமித்துள்ளாா்.
Advertisement
அதன்படி, முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், மு.தம்பிதுரை, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செம்மலை, தளவாய்சுந்தரம், ப.தனபால் உள்பட 111 போ் கொண்ட குழுவை நியமித்து அறிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.