தமிழ்நாடு

குடியரசு நாள் விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!

DIN

சிதம்பரம்: 74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட்டது.  

பின்னர், பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடியை வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT