முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது!

ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ஆத்தூர் அருகே தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் கிருஷ்ணராஜ்(47). கூலித் தொழிலாளி. இவர் மீனா(46) மலையாளி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை இரவு மீனாவிடம் ஏற்பட்ட தகராறில் மீனாவை தாக்கியுள்ளார். இதனை மீனாவின் முதல் கணவரின் மகனான விக்னேஷ்(27) கண்டித்து வந்தார். ஆனால், கிருஷ்ணராஜ் மீனாவை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் மீன் வெட்டும் கத்தியால் கிருஷ்ணராஜை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே கிருஷ்ணராஜ் உயிரிழந்தார்.

Advertisement

தகவலறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணராஜின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விக்னேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments