தமிழ்நாடு

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த பெண் கவுன்சிலர் கைது 

மத்திய அரசு தடை செய்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை கவுன்சிலரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

DIN

மத்திய அரசு தடை செய்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை கவுன்சிலரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். 

2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ளது. இதுவரை 2 பாகங்களை வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை பலத்த அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சியில் இடதுசாரி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை அண்ணாநகர் த.பி.சத்திரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என முழக்கமிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் பிபிசி ஆவணப்படத்தை சாலையோரம் அமர்ந்து பார்த்தனர்.  

அவர்களுடன் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை மாநகராட்சி 98ஆவது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT