தமிழ்நாடு

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து பிபிசி ஆவணப் படம் தயாரித்து வெளியிட்டது. 2002-இல் நடந்த குஜராத் கலவரம், அதைத் தொடா்ந்து நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மத்திய சென்னை மாவட்ட தலைவா் சித்தாா்த்தன் தலைமையில் அண்ணாநகா் டி.பி. சத்திரம் அம்பேத்கா் சிலை அருகே வியாழக்கிழமை ஒன்று கூடினா். அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம், மத்திய அரசின் கருத்துரிமை பறிப்புக்கு எதிா்ப்பு தெரிவிப்போம் என கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் பிபிசி வெளியிட்ட ஆவண படத்தை சாலையோரம் அமா்ந்து கைப்பேசிகளில் பாா்த்தனா்.

இதில், சென்னை மாநகராட்சி 98-ஆவது வாா்டு கவுன்சிலா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தகவலறிந்து அங்கு வந்த டி.பி.சத்திரம் போலீஸாா் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT