கோப்புப்படம் 
தமிழ்நாடு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (29-01-2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

DIN

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (29-01-2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

நேற்று (28-01-2023) தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (29-01-2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. 

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 30-01-2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 01-02-2023 அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும். 

இதன் காரணமாக, 

29-01-2023 மற்றும் 30-01-2023: தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 

31-01-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

01-02-2023: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

02-02-2023: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT