தமிழ்நாடு

அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தொடக்கிவைக்கும் அமித் ஷா!

DIN

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தனது நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தொடங்கிவைக்க உள்ளார். 

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முதற்கட்டமாக 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னரே அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பயணத்தைத் தொடங்கவிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தொடங்கிவைக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். 

அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தடுக்க அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டதாகவும் இதனால் பயணத்தைத் துவக்கிவைக்க அமித் ஷா வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அமித் ஷா வருவதால் பயணம் தொடங்கவிருக்கும் ராமேஸ்வரத்தில் அன்றைய தினம் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT