தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு!

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் குறையத்தொடங்கிய மீன்கள் விலை சனிக்கிழமை உயரத் தொடங்கியது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் குறையத்தொடங்கிய மீன்கள் விலை சனிக்கிழமை உயரத் தொடங்கியது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதன் காரணமாக குறைவான படகுகளே சனிக்கிழமை கரை திரும்பின. இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுக ஏலக் கூடத்திற்கு மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த வாரம் குறையத் தொடங்கிய மீன்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. சீலா மீன் கிலோ ரூ.1,200, விலா மின் கிலோ ரூ. 400, ஊளி மீன் கிலோ ரூ.400, பாறை மீன் கிலோ ரூ. 300, நண்டு கிலோ ரூ. 250, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,400, கண்ணாடி பாறை கிலோ ரூ.500 என விற்பனையானது. மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT