FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் கூலித் தொழிலாளி அடித்து கொலை: போலீசார் விசாரணை

சேலத்தில் கூலித் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 1 ஜூலை 2023, 11:27 am IST
பகிர்:


சேலத்தில் கூலித் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் கோரிமேடு அருகே உள்ள மரம் மில்லில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேலம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கா சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisement

Advertisement

இந்த நிலையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சேலம் பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்கின்ற குமார் என்பதும், இவர் தன் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments