நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம். 
தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பழைமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா கடந்த ஜூன் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதியுலா நடை வீதியுலா நடைபெற்றது. நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி இன்னிசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன. 

எட்டாம் திருநாளான சனிக்கிழமை காலையில் சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவில் தேர்கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்ககைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி-அம்மன் தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப், உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT