முகப்பு
தமிழ்நாடு

மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலி!

வாலாஜா அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால், மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 4 ஜூலை 2023, 11:52 am IST
இறந்த தேவராஜ்.
பகிர்:

வாலாஜா அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால், மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (40). இவரது மனைவி பானுமதி (34), இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், தேவராஜ் தொடர்ந்து  குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான சின்னதகர குப்பத்தில் இருந்து வந்துள்ளார். 

Advertisement

அங்கு வந்த தேவராஜ் குடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி, தனது கனவர் தேவராஜை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.