தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு... கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு

DIN


கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. 

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் கோவை குற்றாலத்தில் மழை பெய்து வந்த நிலையில், மதியத்திற்கு மேல் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நீர் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும், கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT