ஆளுநா் ஆா்.என்.ரவி 
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவி புதுக்கோட்டை வருகை ரத்து?

தமிழக ஆளுநர் புதுக்கோட்டை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆளுநர் புதுக்கோட்டை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

DIN

புதுக்கோட்டை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புதுக்கோட்டை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதுக்கோட்டையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. 

ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோரின் பெயர்களும் வெவ்வேறு நாட்களின் நிகழ்ச்சிகளில் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி பெயர் இடம்பெற்றிருந்ததை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் விரும்பவில்லை. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முகநூலில் கடுமையாக விமர்சித்திருந்தனர். போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆளுநர் பெயரை எடுத்துவிட்டு புதிய அழைப்பிதழ் தயாரித்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிக்கான ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற 47ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT