அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு வழக்குகள் தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்களான சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோர் மீது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க அனுமதி வழங்கக்கோரி ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி நேற்று (புதன்கிழமை) கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்து ஆளுநர் மாளிகை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும்,
கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசு இன்னும் தரவில்லை என்பதால் அறிக்கை கிடைக்கும் வரை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும்,
எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நிலுவை வழக்குகள், மசோதாக்கள்: ஆளுநருக்கு சட்ட அமைச்சர் கடிதம்
ஆனால், ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.