தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

DIN

தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் வியாழக்கிழமை தடை விதித்தனர்.

தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது பெய்து வருகிறது. இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு நீர் வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

வியாழக்கிழமை காலையில் அருவியின் நீர்வரத்தைக் கண்காணித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து சுருளியாற்றில் குளித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT