கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 
தமிழ்நாடு

டிஐஜி விஜயகுமார் மறைவு: டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவையடுத்து அவரது உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

DIN

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவையடுத்து அவரது உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கோவை சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல், தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை சார்ந்து பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT