எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கு மீண்டும் விசாரணை!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்கப்பட்டது.

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், அதனால் 2018 ஆம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT