தமிழ்நாடு

ரூ.20-க்கு தக்காளி விற்ற கடலூர் வியாபாரி!

நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் தவித்து வருகின்றனர்.

DIN

நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில், கடலூரில் உள்ள ஒரு வியாபாரி தனது கடையின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று ஒரு கிலோ தக்காளியை ரூ.20க்கு விற்பனை செய்தார்.

கடலூர் மாவட்டம், செல்லக்குப்பத்தில் டி.ஆர்.காய்கறிகள் மற்றும் வெங்காய கடை உரிமையாளரான டி. ராஜேஷ்(38), கூறுகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, போக்குவரத்துக் கட்டணம் உள்பட ஒரு கிலோ ரூ.60-க்கு, 550 கிலோ தக்காளி வாங்கினேன். அதன் பிறகு ஏழைகளுக்கு உதவுவதற்காக கிலோ ஒன்றுக்கு ரூ.40 குறைத்து விற்றேன்.

இந்த சலுகையால் முடிந்தவரை பலர் பயனடைய வேண்டும் என்று நான் விரும்பியதால் ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கினேன். சில நிமிடங்களில் அனைத்து தக்காளியும் விற்றுத் தீர்ந்தது. நேற்று (சனிக்கிழமை) ஒரு கிலோ தக்காளியை ரூ.48 ஆக விலையை உயர்த்தி 280 கிலோவுக்கு மேல் விற்றேன்.

நான் கடையை 2019ஆம் ஆண்டில் நிறுவிய போது, வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 100க்கு மேல் உயர்ந்தது. இருப்பினும் ஓப்பனிங் ஆஃபராக கிலோ ரூ.10க்கு விற்றேன். அதே போல ஒவ்வொரு ஆண்டும் எனது கடையின் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் சலுகை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வரும் நிலையில், விலைவாசி உயர்வுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.68 என்ற மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT