கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை: இன்றைய நிலவரம்!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.10  அதிகரித்து ரூ.130 விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.10  அதிகரித்து ரூ.130 விற்பனை செய்யப்படுகிறது. 

நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. 

சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சிறிய தக்காளியின் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்று, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனையானது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT