கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் விரைந்து நடைபெறுகிறது. தற்போது பேருந்து நிலையத்தில் ரூ.15 கோடி செலவில் மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர். திட்டமிடாமல் அமைத்ததால் ஒதுக்கீடு செய்ததை விட கூடுதலாக 25 சதவிகித தொகை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.