வைகோ | திருமாவளவன் 
தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் கூட்டம்: மதிமுக, விசிகவுக்கு அழைப்பு!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே,  உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைல் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17-18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும், முந்தைய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாத மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT