இறந்த மாணவர் ரோஹித் 
தமிழ்நாடு

அரக்கோணத்தில் பள்ளி மாணவர் திடீர் இறப்பு!

அரக்கோணத்தில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். 

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். 

அரக்கோணம் விண்டர்பேட்டை எஸ். வி. நகரைச் சேர்ந்த செல்வகுமாரின் மகன் ரோஹித் (16) அரக்கோணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 

புதன்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்ட நிலையில்,நெஞ்சு வலிப்பதாக ரோஹித் கூறியுள்ளார். அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஹித் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT