தமிழ்நாடு

சென்னை-பெங்களூரு விரைவு ரயிலில் புகை!

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

DIN

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்து விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ரயில் என்ஜினிலிருந்து திடீரென பெருமளவில் புகை வெளியானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், புகை வந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேக் பழுது காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT