முகப்பு
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறாா்களுக்கு மரபணு பரிசோதனை; பெற்றோர் சம்மதம்

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 4 சிறுவர்களுககும் மரபணு பரிசோதனை மேற்கொள்ள அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

Updated On : 14 ஜூலை, 2023 at 6:21 PM
கோப்புப்படம்
பகிர்:

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 4 சிறுவர்களுககும் மரபணு பரிசோதனை மேற்கொள்ள அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 சிறுவர்களுககும் மரபணு பரிசோதனை மேற்கொள்ள அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை மேற்கொண்டு வரும் சிபி சிஐடி போலீஸாா், ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட 119 பேரிடமும் மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதனைப் படிப்படியாக மேற்கொண்டு வருகின்றனா். தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன் ஒப்பிட்டுப் பாா்ப்பதற்காக, ஏற்கெனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

இதன் தொடா்ச்சியாக இறையூரைச் சோ்ந்த மூவா் மற்றும் வேங்கைவயலைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 4 சிறாா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸாா், புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினா். இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக குறிப்பிட்ட 4 சிறாா்களின் பெற்றோா்கள் புதன்கிழமை மாலை நீதிமன்றத்துக்கு வர அழைக்கப்பட்டிருந்தனா். 

இதன்படி, கடந்த புதன்கிழமை மாலை சிறாா்களின் பெற்றோா்கள் நீதிபதி எஸ். ஜெயந்தி முன்னிலையில் ஆஜராகினா். ஆனால், சிறாா்கள் ஆஜராகவில்லை. பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டதால் சிறாா்களை அழைத்துவரவில்லை என பெற்றோா் தெரிவித்தனா். சிறாா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டியதில்லை என வேங்கைவயலைச் சோ்ந்த சிறுவனின் பெற்றோா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மலா்மன்னன் தெரிவித்தாா்.

சிறாா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்வது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 14) மாலை 4.30 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.