நெய்வேலி: கடலூரில் என்எல்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யப்படும் வரை குறிப்பிட்ட சம்பளம் என்ற 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இதையும் படிக்க | வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இதையடுத்து கடலூரில் என்எல்சி அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்தவிட உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்பாக சனிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியாகும் என ஒப்பந்தத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.