தமிழ்நாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி வானதி சீனிவாசன் பயணம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  

DIN


கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாள்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாள்களிலும் கோயில் நடை திறக்கப்படும்.

அதன்படி, ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 

இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் விரதம் இருந்து மாலை அணிந்து ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். 

அவருடன் சிறுவர், சிறுமியர் உள்பட 10 பேர் சபரிமலை யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.

இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் வாசுகியும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT