மதுரை - சண்டீகர் ரயில் தாமதமாகப் புறப்படும்!
இணை ரயில் தாமதமானதால், மதுரை - சண்டிகர் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : இணை ரயில் தாமதமானதால், மதுரை - சண்டிகர் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து புதன்கிழமை (ஜூலை 19) இரவு 11.35 மணிக்குப் புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் (12687) விரைவு ரயில், 3 மணி நேரம் தாமதமாக, நாளை காலை 2.30 மணிக்குப் புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - சண்டிகர் ரயிலுக்கான இணை ரயில் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, இந்த ரயிலின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.