உத்திரமேரூர் அருகே ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து திங்கள்கிழமை காலை 7 மணியளவில் படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் பொற்பந்தல் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் சிவானந்தம் மற்றும் ஐந்து பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் ஜெயவேல், சாலவாக்கம் உதவி ஆய்வாளர் கிஷோர் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.